News
சந்தானம் பட இயக்குனருடன் இணையும் யோகி பாபு – படக்கதை என்ன தெரியுமா?
சினிமாவிற்குள் பலவகையான கதாபாத்திரமாக உள்ளே வந்தாலும் திரைக்கு வந்த பிறகு அனைவருக்குமே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். முக்கிய நகைச்சுவை நடிகர்களாக வரும் பலருக்கும் இந்த ஆசை இருப்பதுண்டு.

பழைய காமெடி நடிகரான கவுண்டமணியில் துவங்கி வடிவேலு, சந்தானம் வரை பலரும் கதாநாயகர்களாக நடித்துள்ள நிலையில் தற்சமயம் காமெடி நடிகரான யோகி பாபுவும் கதாநாயகராக சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஏ1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜான்சன் அவர்கள் யோகி பாபுவை வைத்து படம் இயக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.
இரண்டு ஹிட் படங்கள் கொடுத்த பிறகும் கூட பெரிதாக தயாரிப்பாளர்கள் கிடைக்காத நிலையில் தானே தயாரித்து இந்த படத்தை இயக்குவதாக உள்ளாராம் ஜான்சன்.

இந்த படத்தின் பெயர் மெடிக்கல் மிராக்கல் என வைக்கப்பட உள்ளதாம். படத்தில் யோகிபாபு ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஜான்சன் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல நகைச்சுவையான திரைப்படங்களாக இருப்பதால் இந்த படத்திற்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
