30 பெயரை ரிஜக்ட் பண்ணிட்டாரு – 31 வது பேருதான் ஜெயிலர்..!

தலைவரின் 169 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனிற்கு ஏற்கனவே பீஸ்ட் திரைப்படம் பெரிய தோல்வியை ஏற்படுத்திய நிலையில் ரஜினிகாந்த் திரைப்படமாவது நல்ல வெற்றியை கொடுக்குமா? என பலரும் அஞ்சிய நிலையில், படத்தின் கதையை மேம்படுத்த கே.எஸ் ரவிக்குமாரையும் திரைக்கதை குழுவில் இணைத்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என குழப்பம் வர ஒரு 30 படப்பெயரை கொடுத்துள்ளாராம் நெல்சன். ஆனால் ரஜினிக்கு அந்த பெயர்கள் எதுவும் அவ்வளவாக பிடிக்கவில்லை.

ஏனெனில் படத்தின் பெயரே மக்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வேண்டும் என ரஜினி நினைத்தாராம். பிறகு இறுதியாக ரஜினி தேர்ந்தெடுத்த பெயர்தான் ஜெயிலர் எனக் கூறப்படுகிறது. 

ஏற்கனவே பேட்ட படத்தில் இவர் ஹாஸ்டல் வார்டனாக இருந்த அந்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்ததால், ஜெயில் வார்டன் என்னும்போது அதை விட கமர்சியலான கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கூட பக்கா கமர்ஷியல் படம் என்பதை காட்டும் விதமாகத்தான் உள்ளது.

You may also like...