தளபதிக்கு நிகரா எனக்கும் சம்பளம் வேணும் – சண்டை பிடித்த அஜித்

தமிழில் பிரபல நடிகர்கள் வரிசையில் யார் டாப்பில் இருக்கிறார்களோ அவர்களே அதிகமான சம்பளத்தை பெற முடியும்.

படத்தின் வசூல், அவருக்கு இருக்கும் ரசிக பட்டாளம், வெற்றி படங்களின் எண்ணிக்கை இவற்றை எல்லாம் கொண்டே ஒரு நட்சத்திரத்தின் சம்பளமானது நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் நடிகர் ரஜினி மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்களாக உள்ளனர்.

மூன்றாவதாக நடிகர் அஜித் உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித், விஜய்க்கு நிகரான அளவில் படங்களில் நடித்துள்ளார் என்றாலும் சமீபத்தில் வந்த வலிமை அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம் நடிகர் அஜித். அவரிடம் கதை கூற வருபவர்களிடம் 100 கோடி சம்பளம் இருந்தால்தான் நடிப்பேன் என கூறுகிறாராம்.

இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனராம். ஆனால் விஜய் அஜித் இருவருமே சமமான திறன் கொண்டவர்கள் எனும்போது தளபதிக்கு அளிக்கும் அளவு சம்பளத்தை அஜித்துக்கும் அளிக்கலாமே? என்றும் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

Refresh