Cinema History
அந்த இளையராஜா பாட்டை தூக்கிப்போட்டு என் பாட்டை கேளுங்க!.. நேரடியாக தந்தையை கலாய்த்த யுவன் சங்கர் ராஜா!..
Yuvan Shankar Raja: தமிழ் சினிமா இசை கலைஞர்களில் இளையராஜாவிற்கு மக்கள் அளித்திருக்கும் இடம் மிக பெரியது என கூறலாம். எத்தனையோ புது இசையமைப்பாளர்கள் எல்லாம் வந்த பிறகும் கூட இன்னும் முக்கால்வாசி பேர் என்றுமே ராஜாதான் என்னும் மனநிலையில்தான் இருக்கின்றனர்.
அதே சமயம் புதுமையை விரும்பும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர். அப்படி புதுமையை விரும்பும் பலரும் அப்போதே அதிக விரும்பியது இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானைதான். ஏ.ஆர் ரகுமானின் இசை இளையராஜாவின் இசையில் இருந்து மொத்தமாக மாறுப்பட்டு இருந்தது.
பலரும் இளையராஜாவின் காலம் முடிந்துவிட்டது என கூறி வந்தப்போது ஏ.ஆர் ரகுமானுக்கு போட்டியாக இளையராஜாவின் அடுத்த சந்ததி களம் இறங்கியது. அவர்தான் யுவன் சங்கர் ராஜா. யுவன் சங்கர் ராஜாவின் இசை ஏ.ஆர் ரகுமானின் இசைக்கு சமமாக இருந்தது.

இந்த நிலையில் பிரபலமான யுவன், இளையராஜாவின் பல பாடல்களை ரீமிக்ஸ் செய்துள்ளார். அந்த வகையில் ஒரு பாடலை ரிமிக்ஸ் செய்யும்போது இளையராஜவையே கலாய்த்து விட்டார். குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் என்னும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்தார். அதில் நந்தவனத்தில் வந்த இராஜகுமாரி என்னும் கரகாட்டக்காரனில் வரும் பாடலை ரீமேக் செய்திருப்பார்.
முட்டத்து பக்கத்தில டெண்டு கொட்டாயி என்னும் அந்த பாடலில் அந்த பழைப்பாட்ட தூக்கிப்போடு ,இந்தப் பாட்டப் பாடு என வரிகள் இருக்கும். தனது தந்தையையே விளையாட்டாக கலாய்க்கும் விதமாக அந்த வரிகளை வைத்திருப்பார் யுவன் சங்கர் ராஜா!.
அந்த பாடலை பாடியவர் வெங்கட் பிரபு, அதே பாடலை கரகாட்டக்காரனில் பாடியவர் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.
