Latest News
தமிழில் கேஜிஎஃப் மாதிரி ஒரு படமா? – எதிர்பார்க்க வைக்கும் 1947 போஸ்டர்!
பேன் இந்தியா படமாக சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் கேஜிஎஃப் காய்ச்சல் ஒட்டிக் கொண்டுள்ளது.
கேஜிஎஃப் தந்த பாதிப்பால் பல மொழி சினிமாக்கள் தங்கள் கதைகளையே திரும்ப மாத்தி எழுதி வருகிறார்களாம். வசூலிலும் கேஜிஎஃப் படைத்துள்ள சாதனை மற்ற தயாரிப்பாளர்களுக்கும் அதுபோன்ற படம் எடுக்க வேண்டும் என ஆசையை ஏற்படுத்தியுள்ளதாம்.
கேஜிஎஃப் வெற்றியடைய பல காரணங்கள் உள்ளது அதில் முக்கியமான காரணம் கதை நடக்கும் காலகட்டம் 1970 என செட் செய்திருப்பது. தற்போது அதுபோல 1947ம் ஆண்டு காலக்கட்டத்தை மையப்படுத்தி தமிழ் படம் ஒன்று ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
1947 என்று தலைப்பு கொண்ட இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 1947 ஆகஸ்டு 15ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்டு 16, 1947ல் கதை நடப்பதாக தெரிகிறது. சமீபத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை மையப்படுத்திய ஆர்.ஆர்,ஆர் படம் ஹிட் அடித்தது. அதுபோல இந்த படம் ஹிட் அடிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்