Tamil Cinema News
2014 இல் நடக்கும் சம்பவம் எல்லாம் 2024 இல் மறுபடி நடக்குது.. தமிழ் சினிமாவில் இதை கவனிச்சீங்களா?. மர்மமா இருக்கே.!
சில நேரங்களில் நமது வாழ்க்கையில் வித்தியாசமான சில நிகழ்வுகள் நடப்பதை பார்க்க முடியும். சில சமயங்களில் நடந்த நிகழ்வு ஏற்கனவே நடந்தது போல நமக்கு தோன்றும்.
அதேபோல தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு நடந்த சில விஷயங்களை போலவே 2024 ஆம் ஆண்டும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது.
ரஜினிகாந்த்:
இரண்டு திரைப்படம் விமர்சன ரீதியாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதேபோல 2024 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே கூட கலவையான விமர்சனங்கள்தான் வந்தன 2014 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் நடிப்பில் கத்தி திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்தது. அதேபோல இந்த வருடமும் நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.
சிவகார்த்திகேயன்
அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2014 ஆம் ஆண்டு தான் அவருடைய திரைப்படங்களிலேயே பெரிய ஹிட் திரைப்படமான மான்கராத்தே திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருடைய திரை துறையில் ஒரு பெரிய ஹிட் திரைப்படமாக அமரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு மான்கராத்தே திரைப்படத்திற்கு பிறகு தான் சிவகார்த்திகேயன் அவரது சம்பளத்தை அதிகரித்தார். அதேபோல இப்பொழுதும் அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அவருடைய சம்பளத்தை அதிகரித்துள்ளார். மேலும் இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர்கள் தான் இயக்குனர்களாக இருந்திருக்கின்றனர்.
சூர்யா:
அடுத்தது நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த திரைப்படத்திற்கு படத்தின் இயக்குனரே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் படம் வெளியான பிறகு அந்த எதிர்பார்ப்பை எல்லாம் சுக்கு நூறாக ஆக்கும் வகையில் படம் தோல்வியை கண்டது.
அதேபோல இந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்திற்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் துவங்கி அனைவருமே மிகப்பெரிதாக பேசினார்கள். ஆனால் படம் வெளியான பிறகு எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது.
தனுஷ்:
தனுஷ்க்கு 2014ஆம் ஆண்டு தான் அவருடைய 25வது திரைப்படமான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளியானது தற்சமயம் 2024 ஆம் ஆண்டு அவருடைய ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
அதேபோல இயக்குனர் சுந்தர் சி முதன்முதலாக அரண்மனை திரைப்படத்தை துவங்கி வைத்தது 2014 ஆம் ஆண்டு தான் அரண்மனை படத்தின் முதல் பாகம் 2014 ஆம் ஆண்டு வெளியானது தற்சமயம் அதன் நான்காம் பாகம் இந்த வருடம் வெளியாகி இருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்