Movie Reviews
சூர்யவம்சம் குடும்பத்தின் 3BHK படம்.. எப்படி இருக்கு?.
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம்தான் 3BHK திரைப்படம். இந்த திரைப்படத்தில் சரத்குமார், தேவயாணி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் கதைப்படி ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என நினைக்கிறது. அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வந்த வீடு திரைப்படத்தின் கதைக்களமும் இந்த திரைப்படத்தின் கதைக்களம் ஒன்று போலவே உள்ளது.
ஆனால் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்துக்கு சொந்த வீடு எவ்வளவு பெரிய கனவு என்பதை கூறும் வகையில் கதை அமைந்துள்ளது. சில காலங்களாகவே தமிழில் குறைவான அளவிலேயே மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் வருகின்றன.
அந்த வகையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
