Connect with us

தியேட்டர் ஓடிடி என இந்த வாரம் வரிசையாக களம் இறங்கும் 7 படங்கள்..

OTT films

News

தியேட்டர் ஓடிடி என இந்த வாரம் வரிசையாக களம் இறங்கும் 7 படங்கள்..

Social Media Bar

சில வருடங்களுக்கு முன்பு வரை வாரத்தில் குறைந்தது ஒரு படமாவது வெளியாகி விடும். ஆனால் இப்போது அப்படி இல்லை. படங்கள் வெளியாகும் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதிலும் பெரிய பட்ஜெட் படங்கள் அதிக அளவில் வெளியாகுவது இல்லை. இந்நிலையில் தான் இந்த வாரம் வரிசையாக ஏழு படங்கள் வெளியாகவுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ராயன் படம் வெளியீடு

சில நாட்களாக பெரிய பட்ஜெட் படங்கள் எதும் வெளியாகாத நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படம் வெளியாகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தனுஷின் 50 வது படமாகும்

 raayan dhanush

இந்த ராயன் படத்தை அவரே இயக்கி நடித்திருப்பதால், இந்த படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல இப்படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது. இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியாகவுள்ள மற்ற படங்கள்

இந்த படத்திற்கு அடுத்து தெலுங்கில் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிவரும் ஆப்ரேஷன் ராவன் திரைப்படம் வருகின்ற 26-ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்த படம் தவிர சில படங்கள் ஓடிடியில் வெளிவர இருக்கிறது.

அந்த வரிசையில் பார்த்தால், யோகி பாபுவின் நடிப்பில் தயாராகியுள்ள சட்னி சாம்பார் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் யோகி பாபு, கயல் சந்திரன், வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

yogi babu

இதனை தொடர்ந்து சோனியா அகர்வால் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கிரான்மா என்னும் படம் வரும் 23-ஆம் தேதி ஆகா தமிழ் தளத்தில் வெளியாகிறது. அதேபோல் பையா ஜி என்ற ஹிந்தி படம் ஜி5 தளத்தில் ஜூலை 26 வெளியாகிறது.

இவை மட்டுமின்றி யுகேந்திரன் நடிப்பில் வெளியான காழ் என்னும் படமும் ஆகா தமிழ் என்னும் தளத்தில் 23ஆம் தேதி வெளியாகிறது. இதை அடுத்து பிளடி இஷ்க் என்னும் இந்தி படம் வரும் 26 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இந்த படங்கள் அனைத்தும் இந்த வாரம் திரையரங்குள் மற்றும் ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.

To Top