Tamil Cinema News
7ஜி ரெயின்போ காலணி 2 வை விரைவில் எதிர்பார்க்கலாம்.. வெளிவந்த அப்டேட்.!
இயக்குனர் செல்வராகவன் ஒரு காலக்கட்டத்தில் மிக பிரபலமான இயக்குனராக இருந்து வந்தார். அந்த சமயத்தில் அவரது திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பும் இருந்து வந்தது. அப்படியாக 2004 ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வந்த திரைப்படம்தான் 7ஜி ரெயின்போ காலணி.
7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தில் கதாநாயகனாக ரவி கிருஷ்ணா நடித்திருந்தார். நடிகை சோனியா அகர்வால் அதில் கதாநாயகியாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது.
மேலும் படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்தன. இந்த நிலையில் காலப்போக்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரும் படங்களுக்கு வரவேற்புகள் குறைந்தன. அதனை தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதை காட்டிலும் அதிகமாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் செல்வராகவன் மீண்டும் இயக்குனராக களம் இறங்கி 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்திற்காக செல்வராகவனின் ரசிகர்கள் காத்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னமும் 2 வார படப்பிடிப்புகள்தான் பாக்கி இருக்கிறது. எனவே விரைவில் இந்த படத்தை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன.
