ஜெயம் ரவியோட நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.. நல்ல படத்தில் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் சேதுபதி!.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி பொதுவாக சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் வில்லனாக நடிக்க மாட்டார்கள், ஏனெனில் வில்லனாக நடித்த பிறகு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்று அவர்கள் பயப்படுவார்கள்.

ஆனால் விஜய் சேதுபதியை பொருத்தவரை வில்லன் ஹீரோ என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே அசத்தலாக நடிக்க கூடியவர். தற்சமயம் வெளியாகி இருந்த ஜவான் திரைப்படத்தில் கூட ஷாருக்கான்னுக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

Social Media Bar

ஆனால் கடந்த காலங்களில் சில நல்ல திரைப்படங்களையும் கூட விஜய் சேதுபதி தவறவிட்டிருக்கிறார் .அப்படியாக ஜெயம் ரவி தனி ஒருவன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து நடித்த திரைப்படம் போகன்.

போகன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியைதான் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். இது குறித்து விஜய் சேதுபதியிடம் பேசிய போது அவர் ஏற்கனவே சில படங்களில் கமிட்டாகி இருந்ததால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டார்.

அதனால் திரும்ப விஜய் அரவிந்த்சாமியை அந்த திரைப்படத்திலும் உள்ளனாக நடிக்க வைத்திருந்தனர். ஒருவேளை அந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தால் அவருக்கும் அது ஒரு நல்ல படமாக இருந்திருக்கும்.