Dhanush and Samuthirakani : எந்த வேஷம் கொடுத்தாலும் எளிதில் தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பவர் குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில் மட்டும் பல முயற்சிகளை எடுப்பவர் அல்ல தன் படைப்பிலும் பல விதமான முயற்சிகளை செய்பவர்.
இன்றைய தமிழ் சினிமாவில் நடிகனாக, வில்லனாக, ஆசானாக, சகோதரனாக, தலைவனாக இப்படி எல்லா வகையான வேஷங்களையும் நடித்துக் காட்டியவர்.
அது மட்டுமல்ல இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும், குரல் கொடுப்பவராகவும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்.
இவர் நடித்த படங்களில் மிக முக்கியமான படம் வி.ஐ.பி தனுசுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி மற்றும் தமிழ் சினிமாவில் ஏற்றத்தை கொடுத்த படம். இளம் பட்டாளங்களை வளைத்துப்போட்ட படம்.

எப்போது பார்த்தாலும் அதன் உணர்வு அப்படியே இருக்கும். அப்படிபட்ட படத்தில் சமுத்திரக்கனிக்கான கதாப்பாத்திரம் தந்தை.
அந்த கதாப்பாத்திரத்தில் ஒரு நான்கு வரி வசனம் தான் பேச வேண்டும் அதையே நான்கைந்து முறை டேக் எடுத்துத் தான் நடித்தார் சமுத்திரக்கனி ஆனால் தற்போது திரைக்கு வந்த வாத்தி படத்தில் நான்கு பக்க வசனத்தை ஒரே டேக்கின் நடித்துக் காட்டியுள்ளார்.
அதை பார்த்து பரவசத்துடன் பயமே வந்துவிட்டது என்று வாத்தி பட நடிகர் தனுஷ் மேடையில் வைத்து கலாய்த்து தள்ளிவிட்டார்.
மேலும் நம் தொழிலுல் முன்னேற்றம் என்பது நாம் அதற்கு தரும் முக்கியத்துவம் தான் அதை சமுத்திரக்கனி சாரை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் புகழ்ந்து தள்ளிவிட்டார் தனுஷ்.






