வெளி ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்றால் படத்தை விட்டே தூக்கிடுவேன் – எஸ். வி ரங்காராவிற்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர்!.

Actor SV Rangarao : தமிழ் சினிமாவிற்கு மிகவும் தாமதமாக வந்த சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எஸ்.வி ரங்காராவ். தமிழில் திரைப்படங்களுக்கு எப்போதும் இளமையில்தான் பலரும் வாய்ப்பு தேடி வருவார்கள்.

அப்படியாக நடிகர் எஸ்.வி ரங்காராவும் தனது இளமை காலங்களிலேயே தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் அப்போது அவருக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை. இதனால் பலரிடமும் பேச்சுக்கு ஆளான எஸ்.வி ரங்காராவ் சினிமாவை விட்டே சென்றார்.

அதன் பிறகு 30 வயதை தாண்டிய பிறகுதான் மீண்டும் சினிமாவிற்கு வந்தார் எஸ்.வி ரங்காராவ். ஆனால் இந்த முறை அவருக்கு நடிப்பு நன்றாக வந்துவிட்டது. இதனை தொடர்ந்து பெரும் நடிகர்கள் பலருடனும் நடிக்க துவங்கிவிட்டார் எஸ்.வி ரங்காராவ்.

Social Media Bar

அதனை தொடர்ந்து தமிழின் முக்கியமான நடிகர்களில் ஒருவரானார் எஸ்.வி ரங்காராவ் ஆனார். இந்த நிலையில் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக்கத்தில் அன்னை என்கிற திரைப்படம் தயாரானது. இந்த திரைப்படத்தில் எஸ்.வி ரங்காராவிற்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

படத்தின் ஒரு பட காட்சி வெளியில் படப்பிடிப்பு நடத்தப்பட இருந்தது. அப்போதெல்லாம் பெரும்பாலும் படப்பிடிப்பு படத்திற்கான ஷெட்டில்தான் நடக்கும். ஆனால் சில காட்சிகள் மட்டும் தேவையெனில் வெளியில் சென்று எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வெளிப்புற படப்பிடிப்பு என்பதை கேள்விப்பட்ட எஸ்.வி ரங்காராவ், நான் வெளிப்புற படப்பிடிப்பில் நடிக்க மாட்டேன் எனவே படப்பிடிப்பை நிறுத்திவிடுங்கள் என கூறியுள்ளார். இந்த விஷயத்தை அறிந்ததும் பஞ்சு மிகவும் கோபமடைந்தார்.

அவர் வந்து நடிக்கவில்லை என்றால் அவரது கதாபாத்திரத்திற்கு வேறு ஆளை போட்டுவிடுவேன் என அவரிடம் கூறுங்கள் என எச்சரிக்கை விட்டுள்ளார் பஞ்சு. அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்த ரங்காராவ் எதற்காக இப்படி செய்கிறீர்கள் நாந்தான் வெளிப்புற படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என கூறினேனே என கூறியுள்ளார்.

ஒரு நடிகர் இயக்குனரின் பேச்சை கேட்டுதான் நடிக்க வேண்டும், அதுதான் நல்ல நடிகருக்கு அழகு என கூறிய பஞ்சு, நடிகருக்கு தகுந்தாற் போல என்னால் பட காட்சிகளை மாற்ற முடியாது என்று நேரடியாகவே கூறியுள்ளார். அந்த சமயத்தில் தவறை உணர்ந்த ரங்காராவ் அந்த படத்தில் நடித்து கொடுத்துள்ளார்.