மீசையை எடுத்தாலும் நல்லா பண்ணியிருக்காங்கயா!.. சிவகார்த்திகேயனால் கமல்ஹாசன் ரொம்ப ஹாப்பி!..

Sivakarthikeyan and Kamalhaasan: 100 கோடிக்கு ஓடி வெற்றியை சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கொடுத்த பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகப்படுத்தினார். மக்கள் மத்தியில் தான் மிகவும் பிரபலமாகிவிட்டதாக நினைத்தார்.

இதனை தொடர்ந்து அடுத்து அவரது நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. தொடர்ந்து படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால்தான் மக்கள் பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

அதனை தொடர்ந்து அவர் நடித்த மாவீரன் திரைப்படம் கமர்சியல் திரைப்படமாகும். அதே நேரத்தில் பெரும் அரசியலை பேசும் படமாகவும் இருந்ததால் நல்ல வெற்றியை கண்டது. அதனை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் அயலான். அயலானுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த நடித்து வரும் படமும் நல்ல கலையாக இருப்பதாக கூறப்படுகிறது.

Social Media Bar

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த திரைப்படம் குறித்து முதலில் சில சர்ச்சைகள் சென்று கொண்டிருந்தன. இந்த திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விடவும் படத்தின் செலவு அதிகமாகி விட்டதால் சோனி நிறுவனம் படத்தை கைவிட்டது என்றும் அதற்கு கமல்ஹாசன் தற்சமயம் கை காசை போட்டுதான் படத்தை தயாரித்து வருகிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

பாதி படம் தயாராகி விட்ட நிலையில் படத்தை போட்டு பார்த்திருக்கிறார் கமல்ஹாசன். அந்த படம் கமல்ஹாசனுக்கு மிகவும் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ராணுவத்திற்காக பயிற்சி எடுத்துவிட்டு ராணுவத்தில் சென்று சேரும் ஒரு வீரனின் கதையாக தான் இந்த சிவகார்த்திகேயனின் படம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது ராணுவத்திற்கு செல்வதற்கு முந்தைய காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் மீசை தாடி எல்லாம் எடுத்துவிட்டு பள்ளியில் படிக்கும் பையன் போன்ற தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.