Biggboss tamill : பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு சீசனை விடவும் இந்த சீசனில் கமல்ஹாசன் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பிரதீப்பை எலிமினேட் செய்த பிரச்சினையிலேயே கமல் எவ்வளவு நியாயமான விஷயங்களை அதற்கு எடுத்து கூறினாலும் கூட பிரதீப் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான் என்பது அன்று நடந்த வீடியோவிலேயே தெரிந்துவிட்டது.
அதை மக்கள் ஷேர் செய்து கமலை விமர்சித்து வந்து கொண்டிருந்தனர் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிக்சன் அர்ச்சனா தொடர்பான பிரச்சனை ஒன்று நடந்தது. அதில் நிக்சன் அர்ச்சனாவை சொருகிடுவேன் என்று கூறி திட்டி இருந்தார்.
இதனை கண்டித்து கமல் பெருசாக பேசுவார் என்று எண்ணும் பொழுது கமல் அதை ஒரு பெரும் பிரச்சனையாக எடுக்காமல் தினேஷும் மணியும் நிக்சன் மீது வட சென்னை ஆள் என்று முத்திரை குத்துகிறார்கள் என்று ஒரு புது பிரச்சனையை உருவாக்கி அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தார்.

இந்த விஷயம் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதை அடுத்து திரும்பவும் கமலை அதிகமாக விமர்சிக்க துவங்கினர். அடுத்து தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் தொடர்ந்து தன்னுடைய பெயர் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாவதை கமல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே பிக் பாஸில் இருந்து விலகுவதற்கு கமல் முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஏற்கனவே பிக் பாஸை தொகுத்து வழங்கிய நடிகர் சிம்புவை மீண்டும் அழைப்பதற்கு விஜய் டிவி திட்டம் போட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஒருவேளை சிம்பு வராத பட்சத்தில் விஜய் சேதுபதி மாதவன் சரத்குமார் அர்ஜுன் இவர்கள் நால்வரில் யாரையாவது ஒருவரை இந்த நிகழ்ச்சியை தொகுக்க அழைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






