தயாரிப்பு நிறுவனத்திற்கே கரும்புள்ளியாக அமைந்த தனுஷ் படம்!.. வேதனையில் நிறுவனம்!.

Actor Dhanush: தமிழ்  சினிமாவில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வர் இயக்குகிறார்.

Social Media Bar

படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில் தற்சமயம் வரும் பொங்கலன்று இந்த திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் அதிகமான ரத்த காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்ட கேப்டன் மில்லர் திரைப்படம் ஏ சான்றிதழை வாங்கியுள்ளதாம்.

அதாவது வயது வந்தவர்கள் மட்டுமே அந்த படத்தை திரையரங்குகளில் காணலாம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தது. சத்யஜோதி பிலிம்ஸ் பல ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரித்து வருகிறது. ஆனால் அதில் ஒரு படம் கூட ஏ சான்றிதழ் வாங்கியது கிடையாது.

எனவே இந்த ஏ சான்றிதழை மாற்ற முடியுமா என தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளது. அதற்கு பதிலளித்த தணிக்கை குழு இறுதி காட்சிகளில் 4 நிமிடத்திற்கு இருக்கும் வன்முறை காட்சிகளை நீக்கினால் யு.ஏ சான்றிதழ் தருவதாக கூறியுள்ளனர்.

எனவே இதுக்குறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி வருகிறது சத்யஜோதி பிலிம்ஸ்.