MR radha : தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஆர் ராதா. மற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிப்பில் கொஞ்சம் மாற்றத்தை காட்டக்கூடியவர் நடிகர் எம்.ஆர் ராதா. அவரது நடிப்பிலேயே கொஞ்சம் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடியும்.
ராதா ரவி ஒரு பேட்டியில் கூறும்போது கூட மெமிக்ரி செய்யும் பலரும் எம்.ஆர் ராதா குறித்து ஒரே மாதிரியான விஷயங்களைதான் மெமிக்ரி செய்கிறார்கள். ஆனால் அவரிடம் நான்கு வகையான பேச்சு திறன்கள் இருந்தன என கூறியுள்ளார்.
எம்.ஆர் ராதா எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு முன்பிருந்த நாடக துறையில் இருந்து வந்தார். சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் எம்.ஆர் ராதா சொந்தமாக நாடக கம்பெனியே வைத்திருந்தார். அதில் எடுத்த நாடகங்கள் பலவற்றை பிறகு திரைப்படமாக்கினார்.

அதில் இரத்த கண்ணீர் முக்கியமான திரைப்படமாகும். எம்.ஆர் ராதா நாடகங்களுக்கு நடிக்க வந்த ஆரம்பத்தில் ஜகந்நாதர் ஐயர் நாடக கம்பெனியில்தான் நடித்து வந்தார். அப்போதுதான் நாடகத்திற்கு புதிது என்பதால் அப்போது அவருக்கு பெரிதாக நடிக்க வரவில்லை.
அந்த சமயத்தில் அவருக்கு குருவாக இருந்தவர் எம்.எஸ் முத்துகிருஷ்ணன். பிறகு எம்.ஆர் ராதா வளர்ந்து வந்த காலத்தில் தனது குருவை பெருமைப்படுத்துவதற்காக அவர் நடத்திய போர்வாள் என்னும் நாடகத்திற்கு அவரது குருவை தலைமை தாங்க வைத்தார்.
மேலும் ஒரு விழாவில் தனது ரசிகர்களுக்கு மத்தியில் எம்.எஸ் முத்துகிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிந்து தங்கம் கொடுத்து பெருமைப்படுத்தினார் எம்.ஆர் ராதா!..






