விஜய் கோட் திரைப்படம் புது போஸ்டர்… என்ன கதைன்னு இப்பதான் புரியுது!..

Vijay GOAT : லியோ திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்து விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் கோட் என்கிற திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்குவதால் இந்த திரைப்படம் எப்படியும் ஒரு நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்கிற ஆவல் பலரது மத்தியில் இருந்தது.

ஏனெனில் விஜய் நடித்த திரைப்படங்களில் சச்சின், கில்லி, வசீகரா மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் என்றும் நீங்கா இடம் பெற்ற திரைப்படங்கள் ஆகும். அப்படியான திரைப்படங்கள் மறுபடி வருமா என்பதை விஜய் ரசிகர்களுக்கே பெரும் ஆவலாக இருந்து வருகிறது.

ஆனால் தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் அப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் படம் தொடர்பாக வெளியாகும் போஸ்டர்கள் அனைத்துமே படம் ஒரு ஆக்ஷன் திரைப்படம் என்று காட்டும் வகையிலேயே இருக்கின்றன.

Social Media Bar

இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான போஸ்டர் மூலம் தெரிந்திருந்தது. இந்த நிலையில் தற்சமயம் ஒரு போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் விஜய்யுடன் சேர்ந்து பிரபுதேவா, நடிகர் பிரசாந்த், அஜ்மர் அமீர் போன்ற நடிகர்களும் இருக்கின்றனர்.

இவர்களெல்லாம் ராணுவத்தை சேர்ந்த ஒரே நண்பர்கள் என தெரிகிறது எனவே இதை வைத்து ரசிகர்கள் ஒரு கதையை கூறி வருகின்றனர். அதாவது இந்தியாவில் இருக்கும் ஒரு சீக்ரெட் ஆர்மி தான் இவர்கள் குழு இந்த குழு செய்யும் ஏதோ ஒரு விஷயம் கால பயணத்தை தூண்டி விட அதன் மூலம் இளமையான விஜய் ஒருவர் கதைக்குள் வருகிறார் என்று பேசப்படுகிறது.

ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு டைம் டிராவல் திரைப்படம் என்று வெகு நாட்களாகவே பேச்சுக்கள் இருக்கின்றன எனவே இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டுள்ளது என்று கூறலாம்.