Rajinikanth : தமிழ் சினிமா பிரபலங்களில் அதிகமான மதிப்பு வாய்ந்த ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த காலம் முதலே ரஜினிகாந்திற்க்கு ஆன்மீகம் மீது அதிக ஆர்வம் உண்டு. அதனை தொடர்ந்து நேற்று ராமர் கோயிலின் திறப்பிற்காக உத்தர பிரதேசம் சென்றிருந்தார் ரஜினிகாந்த்.
ராமர் கோயில் திறப்பு தொடர்பாக வட மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்தாலும் தென்னிந்தியாவை பொறுத்தவரை அதற்கு எதிர்ப்பு குரலே அதிகமாக எழுந்து வந்தது. ஏற்கனவே இருந்த ஒரு மத சின்னத்தை அழித்து உருவாக பட்ட இன்னொரு கோவிலுக்கு ஆதரவளிக்க முடியாது என்று அரசியல் கட்சிகள் வெளிப்படையாக பேசத் தொடங்கின.
இதனை அடுத்து அந்த கோவிலுக்கு செல்பவர்கள் குறித்தும் நிறைய பேச்சுக்கள் இருந்தன. முக்கியமாக தனுஷ் அந்த கோவிலுக்கு சென்றது அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கூட நேற்று ராமர் கோவிலுக்கு சென்று இருக்கின்றனர்.

இவ்வளவு சர்ச்சைகளுக்கு நடுவில் ரஜினிகாந்த் கடவுளை தரிசிப்பதற்காக ராமர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். ஆனால் அங்கு அவருக்கும் அவரது மனைவிக்கும் அமர்வதற்கு இருக்கை கிடைக்கவில்லை இதனை அடுத்து அங்கு இருந்த ஊழியர்களிடம் சென்று ரஜினி இருக்கைகள் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இருக்கைகள் எதுவும் இல்லை என அங்குள்ள ஊழியர்கள் அவமதித்ததாக சில பேச்சுக்கள் வலைதளத்தில் வலம் வருகின்றன இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கூட அங்கு சென்று ஒரு இருக்கை கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறாரே என்று இது குறித்து மக்கள் மத்தியில் பேச்சுக்கள் நிலவி வருகிறது.






