என்னாலதான் அந்த படம் ஓடுனுச்சு.. அந்த விஷயத்தை செய்யாதீங்க!.. சிவாஜி பேச்சை மீறி டொக்கு வாங்கிய தயாரிப்பாளர்!..
Sivaji ganesan: சினிமாவில் எல்லா திரைப்படங்களுமே படத்தின் திரைக்கதைக்காக மட்டுமே ஓடிவிடுவது கிடையாது. சில திரைப்படங்கள் நடிப்பின் காரணமாகவும் வெற்றிப்பெறும். உதாரணத்திற்கு பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்தை தவிர்த்து வேறு எந்த நடிகரும் அதே கதையில் நடித்திருந்தாலும் கூட அந்த படம் இவ்வளவு வரவேற்பு பெற்று இருக்குமா என்பது சந்தேகமே…
ஏனெனில் அந்த பாட்ஷா என்கிற கதாபாத்திரத்திற்கு சரியாக நடிப்பை கொடுத்தவர் ரஜினிகாந்த். அதுதான் அந்த படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதே மாதிரியான சம்பவம் சிவாஜி கணேசன் காலகட்டத்திலும் நடந்திருக்கிறது.
சிவாஜி கணேசனை பொருத்தவரை அவரது காலகட்டத்தில் அவருக்கு நிகராக நடிக்க மற்றொரு நடிகர் இல்லை என்று கூறலாம். இதனால் அப்போது இருந்த நடிகர்களிலேயே சிவாஜி கணேசனுக்குதான் அதிகமாக வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் தெய்வப்பிறவி. தெய்வ பிறவி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி மற்றும் எஸ்.எஸ் ஆர் என்று மூன்று முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். மூன்று பேரும் தனது நடிப்பை பிரமாதமாக வெளிக்காட்டி இருந்ததால் அந்த திரைப்படம் நல்ல வெற்றியை கண்டது.
அதனை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை ஹிந்தியில் படமாக வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவாஜி கணேசன் அவரிடம் பேசும் பொழுது நாங்கள் மூன்று பேரும் போட்டி போட்டு நடித்ததால்தான் இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது.
இதையே நீங்கள் ஹிந்தியில் எடுக்கிறீர்கள் என்றால் அதில் அந்த அளவிற்கு நடிக்கும் ஒரு நடிகர் தேவை. அப்படி அதில் பிரமாதமாக நடிக்காத விஷயத்தில் அந்த படம் ஓடுவது கடினம்தான் என்று கூறியிருக்கிறார் சிவாஜி.

இந்த விஷயம் கிருஷ்ணன் பஞ்சுவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் நடிகர்களால் வெற்றி பெற்றது என்று கூறுகிறாரே என்று கோபப்பட்டு இருக்கிறார். இதனால் சிவாஜியின் பேச்சைக் கேட்காமல் தயாரிப்பாளர் அந்த படத்தை ஹிந்தியில் படமாக்கி இருக்கிறார் ஆனால் ஹிந்தியில் படுதோல்வி அடைந்துள்ளது அந்த திரைப்படம்.
அப்போதுதான் தெரிந்திருக்கிறது உண்மையிலேயே சிவாஜியின் நடிப்புக்காகதான் தெய்வப்பிறவி திரைப்படம் ஓடி உள்ளது.