850 அடி வசனம் பேசணும்!.. தமிழ் சினிமாவில் சிவாஜி செய்த சாதனை!.. இப்போ வரை யாரும் முறியடிக்கலை!..

Sivaji Ganesan : என்னதான் இந்த காலத்து தலைமுறைகள் சிவாஜி கணேசனை ஓவர் ஆக்டிங் என்று கூறினாலும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் சிறப்பான நடிகராக அறியப்பட்டவர் சிவாஜி கணேசன் மட்டுமே,

சிவாஜிகணேசன் அப்படி அறியப்படுவதற்கு காரணமாக பல விஷயங்கள் அமைந்துள்ளன. ஆனால் அவை யாவும் தற்போதுள்ள தலைமுறைகள் அறியாதவையாக இருக்கும். சிவாஜி கணேசனுக்கு ஹாலிவுட் தரத்தில் கூட நடிக்க தெரியும் என்று சோ ஒரு முறை ஒரு பேட்டியில் கூறுகிறார்.

ஆனால் தமிழ் மக்களுக்கு இப்படி நடித்தால்தான் பிடிக்கிறது என்பதால்தான் நாடக பாணியிலேயே அவர் நடித்து வந்தார். அப்படியாக சிவாஜி கணேசன் நடிப்புக்கு உதாரணமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜா ராணி என்கிற திரைப்படத்தை படமாக்கும் பொழுது அந்த படத்தில் ஒரே காட்சியில் பேசும் வசனம் ஒன்றை எழுதி இருந்தனர்.

Social Media Bar

அந்த ஒரு வசனத்தை 850 அடி ரீலில் பதிவு செய்ய வேண்டும் அப்பொழுது பிலிம் ரோல் கொண்டு படம் எடுத்ததால் திரும்பத் திரும்ப எல்லாம் ஒரே காட்சியை எடுத்துக் கொண்டிருக்க முடியாது. அது தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட பண விரயத்தை ஏற்படுத்தும்.

எனவே நடிப்பதற்கு முன்பு ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டு பிறகு படத்தில் அதை அப்படியே நடிக்க வேண்டும் என்பதாகத்தான் அப்போது இருந்தது. இந்த நிலையில் இந்த பெரும் வசனத்தை சிவாஜி கணேசனை வைத்து எடுக்கும் பொழுது தவறுகள் வந்தால் திரும்பத் திரும்ப முதலில் இருந்து எடுக்க வேண்டும்.

எனவே வேண்டாம் என்று முடிவு செய்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவாஜி கணேசன் என் நடிப்பின் மீது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா என்று சத்தம் போட்டுவிட்டு அந்த வசனத்தை வாங்கி அதை முழுதாக மனப்பாடம் செய்துவிட்டு நடிக்க துவங்கியிருக்கிறார்.

ஒரே டேக்கில் அந்த மொத்த வாசகத்தையும் பேசி நடித்துக் காட்டினார் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவிலேயே இப்போது வரை அவ்வளவு நீளமான காட்சியில் அவ்வளவு வசனங்களை வேறு எந்த நடிகரும் பேசவில்லை என்று கூறப்படுகிறது அப்படியான ஒரு சாதனையை ராஜா ராணி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் செய்தார்.