அந்த எம்.ஜி.ஆர் பாட்டு மாதிரியே எனக்கு பாட்டு வேணும்!.. அடம்பிடித்த கமல்ஹாசனுக்காக இளையராஜா போட்ட பாட்டு!..

Kamalhaasan and Ilayaraja: கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் நிகரில்லா ஒரு நடிகர் என கூறலாம். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நடிகராக கமல்ஹாசன் பார்க்கப்படுகிறார். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருக்கும்.

ஆனால் சிறுவயது முதலே கமல்ஹாசன் திரைத்துறையில் இருந்து வருவதால் நடிப்பு மட்டுமின்றி படம் இயக்குதல் இசை என அனைத்திலும் திறன் பெற்றிருந்தார். இதனால் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்களில் திரைக்கதைகளில் அவரது தலையீடு சற்று அதிகமாகவே இருக்கும். இதனாலேயே பெரும் இயக்குனர்கள் கமல்ஹாசனை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு தயங்குவதுண்டு.

அந்த மாதிரியான ஒரு சம்பவம் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திலும் நடந்தது. அந்த நிகழ்வை இளையராஜா ஒரு விழாவில் பகிர்ந்திருக்கிறார். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஆனால் கமலும் சேர்ந்து இந்த படத்தில் பணிப்புரிந்திருந்தார்.

Social Media Bar

இதில் குள்ளமாக இருக்கும் கமலுக்கு காதல் வந்த பிறகு புது மாப்பிளைக்கு நல்ல யோகமடா என்கிற ஒரு பாடல் வரும். அந்த பாடல் அப்போது பெரும் வெற்றியை கொடுத்திருந்தது. திருமண வீடுகளில் எல்லாம் அந்த பாடல்தான் ஓடியது. இந்த நிலையில் இதுக்குறித்து இளையராஜா கூறும்போது அவர் அந்த காட்சிக்கு வேறு ஒரு பாடலைதான் இசையமைத்திருந்தார்.

ஆனால் அங்கே வந்த கமல் அன்பே வா திரைப்படத்தில் வரும் நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் என்கிற பாடலை போட்டு காட்டி அது போலவே ஒரு பாடல் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போதுதான் இளையராஜா புது மாப்பிளைக்கு என்கிற பாடலை போட்டுள்ளார்.