Senthil and Bagyaraj: தமிழ் சினிமாவில் இயக்குனராகி பிறகு நடிகராக முடியும் என்பதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நடிகர் பாக்யராஜ் எனலாம். எப்படி மற்ற இளைஞர்கள் கனவுகளோடு சினிமாவை தேடி சென்னைக்கு வந்தார்களோ அப்படித்தான் பாக்கியராஜும் கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார்.
ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்பதற்காகத்தான் பாக்யராஜ் சென்னைக்கு வந்தார். என்றாலும் எடுத்த உடனே கதாநாயகன் ஆவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை போகப்போக தெரிந்து கொண்டார். எனவே முதலில் இயக்குனராகி பிறகு கதாநாயகனாகலாம் என்று முடிவு செய்தார் பாக்யராஜ்.

அப்படியாக ஒரு இயக்குனராகவும் முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த கவுண்டமணி செந்தில் போன்ற பல நடிகர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. அப்பொழுது செந்தில் பலராலும் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்.
இது குறித்து பாக்யராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார். பொதுவாகவே கருப்பாக இருப்பவர்கள் அழகாக இல்லாமல் இருப்பவர்களை அதிகமாக விமர்சிப்பார்கள் இந்த சினிமாக்காரர்கள். அந்த வகையில் நாடக குழுவில் இருந்த பொழுதே செந்திலை மிக மோசமாக நடத்தி வந்தனர் அந்த நாடக நடிகர்கள்.

அவரை டீ வாங்கி வர சொல்வது எடுபிடி வேலைகளை வாங்குவது என்றெல்லாம் செய்து வந்தனர். அப்பொழுது செந்திலை பார்க்கவே பாவமாக இருக்கும். அப்போது நான் முடிவு செய்தேன் சினிமாவில் சென்று பெரிய இயக்குனர் ஆன பிறகு செந்திலுக்கு கண்டிப்பாக வாய்ப்பு தர வேண்டும் என்று அதன்படியே நான் படங்கள் இயக்கத் துவங்கிய பிறகு செந்திலுக்கு வாய்ப்பு கொடுத்தேன்.
அதுவும் தூரல் நின்னு போச்சு திரைப்படத்தில் நம்பியாருக்கு உதவியாளராக செந்திலை நடிக்க வைத்தேன் அப்பொழுது என்னிடம் கண்கலங்கிய செந்தில் இப்படி எல்லாம் நான் நடிப்பேன் என்று ஒரு காலத்திலும் நான் நினைத்ததே கிடையாது என்று கூறியிருந்தார் என்று அந்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் பாக்யராஜ்.
 
			 
			







