உலக நாயகன் கமல்காசன் நடித்து தொண்ணூறுகளிலே சூப்பர் ஹிட் அடித்த குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் மற்றும் கமல், ரோஷினியின் நகரும் படங்களோடே தொடங்குகிறது இந்த மஞ்சுமெல் பாய்ஸ். கேரளாவில் தயாரிக்க பட்டாலும் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் ₹ 25 கோடியை நோக்கி முன்னேறி வருகிறது. குணா படத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட படம் ஹிட் அடித்துக் கொண்டு வரும் நிலையில், இதற்கு அசலாக இருக்கும் குணா படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என தமிழ் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குணா ரீ ரிலீஸ் ஆசை குறித்து வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலலித்த அவர், குணா படத்தில் வரும் எவர் கிரீன் பாடலான கண்மணி அன்போடு பாடலை வாலி எழுத, கமல் காசன் ரோகினியிடம் தனது காதலிக்கு எழுத சொல்லும் கடிதமாக பாடியிருப்பார்.\

இந்த படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆன நிலையிலும், அந்த படம் வெளிவரும் போது பிறக்காத இளைஞர்கள் கூட, தற்போது மஞ்சுமேல் படம் மூலம் அதை பார்க்க விரும்புகின்றனர். இப்போது, தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள் உலக சினிமாவைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதால், குணாவை பாராட்டுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மஞ்சுமேல் பாய்ஸின் வெற்றி குணா படத்திற்கான ஏக்கத்தை தூண்டுவதாகவும், தற்போது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து வெற்றி காண்பது வழக்கமாகி வருவதாலும், குணா படத்தை ரீ ரிலீஸ் செய்ய இதுவே சரியான நேரம் எனவும் கூறியுள்ளார்.
மஞ்சுமேல் ல் பாய்ஸ் படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இந்த படத்திற்கு தூண்டிலாக இருந்த கமலின் குணா படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், குணா இல்லை என்றால் குணா குகையும் இல்லை. குணா குகை இல்லையென்றால் மஞ்சுமேல் பாய்சும் இல்லை என பஞ்ச் அடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.






