நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த இவர் போக போக கதாநாயகனாக நடிக்க துவங்கினார். அதன் பிறகு கதாநாயகனாக அவருக்கு நன்றாகவே வாய்ப்புகள் வர துவங்கின.
இப்போதும் கூட சினிமாவில் பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் அளித்திருக்கும் பேட்டி தற்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் சினிமாவில் வாய்ப்பை பெறவில்லை. மாறாக அவர் மருத்துவ துறையை தேர்ந்தெடுத்தார். மருத்துவராக நிறைய பேருக்கு சிகிச்சை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகள் செய்யும் ஊழல்களை காணொளி ஒன்றில் கூறியுள்ளார் திவ்யா சத்யராஜ்.

அதில் அவர் கூறும்போது சில தனியார் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனைகளுக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக தேவையில்லாத இரத்த பரிசோதனை, ஸ்கேன், எம்.ஆர்.ஐ இதெல்லாம் எடுக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
அதே போல நோயாளி குணமாண பின்பும் கூட இரண்டு நாட்கள் அவர்களை மருத்துவமனையில் வைத்துதான் அனுப்புகிறார்கள். தனியார் மருத்துவமனைக்கு சென்றால் நோய் குணமாகும் என்னும் நம்பிக்கையை விடவும் பணம் காலியாகும் என்கிற பயம்தான் மக்களுக்கு அதிகமாக இருக்கிறது.
எங்கள் அமைப்பின் மூலமாக சில நோயாளிகளுக்கு உதவி செய்தாலும் அனைத்து நோயாளிகளுக்கும் எங்களால் உதவ முடியாது. எனவே நோயாளியை பணம் சம்பாதிக்கும் மெஷினாக பார்க்காதீர்கள். தனியார் மருத்துவமனை வைத்திருப்பவர்கள் நோயாளியை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






