தொடர்ந்து மூணாவது படமும் பாதியிலேயே நின்னுடுச்சு!.. படமே பிக்கப் ஆகாமல் தவிக்கும் சூர்யா!.. அடுத்து அயலான் இயக்குனர் கூடவா?..

Actor Surya: கங்குவா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே கொஞ்சம் இழுப்பறியாகவே சென்று கொண்டுள்ளன. கங்குவா திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருந்தார் சூர்யா.

ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் சூர்யாவால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு முன்பே இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி சில நாட்களில் இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

surya
surya
Social Media Bar

இதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்தும் விலகினார் சூர்யா. பிறகு அந்த திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். இன்னும் சில நாட்களில் அந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. தற்சமயம் சுதா கொங்காரா திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார் சூர்யா. சுதா கொங்காரா ஏற்கனவே சூர்யாவை வைத்து சூரறை போற்று என்கிற மாஸ் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

விலகிய சூர்யா:

எனவே அவரது இயக்கத்தில் புறநானூறு என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார் சூர்யா. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளும் அதிகமாக இருந்தன. இந்த நிலையில் தற்சமயம் இந்த படமும் பாதியிலேயே நின்றுவிட்டது.

Surya

இப்படி தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் சுர்யா நடித்தும் கூட அதன் படப்பிடிப்புகள் முழுமையடையாமலே நின்றுவிட்டது. இதனை அடுத்து அயலான் திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ரவிச்சந்திரன் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை சூர்யாவுக்கு கூறியிருந்தார்.

அடுத்து சூர்யா அதில்தான் நடிக்க உள்ளார் என பேச்சுக்கள் உள்ளன. ஆனால் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை.