Connect with us

அடுத்த எம்.ஜி.ஆர் ஆகிறாரா விஜய்? பண்றதெல்லாம் அப்படியே எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கே!..

MGR vijay

Latest News

அடுத்த எம்.ஜி.ஆர் ஆகிறாரா விஜய்? பண்றதெல்லாம் அப்படியே எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கே!..

cinepettai.com cinepettai.com

Vijay MGR : தமிழக வெற்றி கழகம் தொடங்கிய நாள் முதல் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் நபராக விஜய்தான் இருந்து வருகிறார். விஜய்க்கு என்று தனியாக விளம்பரம் எதுவும் செய்யவே தேவையில்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு விஜய் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் சமூக வலைதளங்களில் தானாகவே பிரபலமாகிவிடுகிறது. இந்த நிலையில் கேரளாவிற்கு கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தார் விஜய்.

vijay-3
vijay-3

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் அங்குதான் படபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளுக்குப் பிறகு சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பே முடிய இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உண்டு.

அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து விஜய்யை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். அவர்களது கூட்டத்தை பார்த்து விஜயே வியந்து போய்விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள ஒரு சிறுமியை தனது கையில் தூக்கி வைத்துக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் விஜய்.

எம்.ஜி.ஆர் ஒருமுறை கேரளாவுக்கு சென்ற பொழுது அவரும் இதே போல ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டே போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டு எம்.ஜி.ஆர் செய்ததை அப்படியே திரும்ப செய்கிறார் விஜய் என்று கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

POPULAR POSTS

samyuktha
poonam bajwa
vijay GOAT
velpari shankar
kamalhaasan lingusamy
rajini ajith
To Top