பாடலாசிரியரை 4 மாசம் படுத்தி எடுத்திருக்கார்!.. மணிரத்தினத்தை விட ஷங்கருக்கு மியூசிக் போடுறது கஷ்டம்!.. ஏ.ஆர் ரஹ்மான் ஓப்பன் டாக்!..

AR Rahman: சிறு வயதிலேயே சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது அது சினிமாவில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது என்றுதான் கூற வேண்டும்.

இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் இயக்குனர் மணிரத்தினத்திற்கு இசையமைக்க துவங்கிய பிறகு மணிரத்தினம் இயக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்தார். இப்போது வரை அவர்தான் இசையமைத்து வருகிறார்.

ar-rahman
ar-rahman
Social Media Bar

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கூட அவர்தான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் ஒரு நேர்க்காணலில் அவர் கலந்துக்கொண்டப்போது சிக்கலான கேள்வி ஒன்று அவரிடம் கேட்கப்பட்டது. ஏ.ஆர் ரகுமான் பெரும்பாலும் மணிரத்தினம், ஷங்கர் ஆகிய இரு இயக்குனர்களுக்கும் அதிகமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

ஏ.ஆர் ரகுமான் கூறிய விஷயம்:

அப்படியிருக்கும்போது இந்த இரண்டு இயக்குனர்களில் யாருக்கு இசையமைப்பது கடினம் என்பதுதான் கேள்வியாக இருந்தது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர் ரகுமான் கூறும்போது உண்மையில் மணிரத்தினத்தை விடவும் ஷங்கருக்கு இசையமைப்பதுதான் கடினம்.

director shankar
director shankar

அவர் ஒரு பாடலை படமாக்குவதற்கே முழு திரைப்படத்திற்கு போடும் உழைப்பை போடுவார். எனவே பாடல் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல நான் இசையமைக்க வேண்டி இருக்கும். அதே போல அவரது திரைப்படத்திற்கு இசையமைக்க அமர்ந்துவிட்டால் வேறு படங்களுக்கு இசையமைக்க விட மாட்டார்.

அவர் படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும். நானாவது பரவாயில்லை. ஒரு பாடலாசிரியரை சரியான பாடல் வரி கிடைக்கவில்லை என்று 4 மாதங்களாக படுத்தி எடுத்து வந்தார் மணிரத்தினம் என தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர் ரகுமான்.