இந்த வாட்டி ராமரும் வராராம்!.. குக் வித் கோமாளியில் கோமாளி அப்டேட் வெளியானது!..

பொதுமக்கள் அனைவரும் பெரும் எதிர்ப்பார்ப்போடும் காத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. இதுவரை நான்கு சீசன்களை நடத்தி வெற்றி நடை போட்டுள்ளது.

உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விடவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம் என கூறலாம். குக் வித் கோமாளியின் முதல் சீசன் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதிகமான நபர்கள் அதை பார்க்கவே இல்லை என கூறலாம்.

ஆனால் நாட்கள் நாட்கள் ஆக ஆக அடுத்த சீசன் அதிக வரவேற்பை பெற்றது. புகழ், சிவாங்கி, மணிமேகலை இவர்கள் மூவரும்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தனர். இந்த நிலையில் போன சீசனில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தது பலருக்கும் கவலையளிக்கும் விஷயமாக அமைந்தது.

cook with comali 5
cook with comali 5
Social Media Bar

இந்த நிலையில் பல தடங்கள்களுக்கு நடுவே தற்சமயம் குக் வித் கோமாளி சீசன் 5 குறித்த அப்டேட்கள் வந்துக்கொண்டுள்ளன. ஏற்கனவே சில காரணங்களால் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார்.

இந்த நிலையில் தற்சமயம் குக் வித் கோமாளி சீசன் 5இன் கோமாளிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மணிமேகலை மீண்டும் இந்த சீசனில் குக் வித் கோமாளிக்கு வந்துள்ளார். புகழ், ராமர், குரேஷி, சுனிதா, குரேஷி ஆகியோர் ஏற்கனவே கன்ஃபார்ம் செய்யப்பட்ட கோமாளிகளாக இருக்கின்றனர்.

மற்ற கோமாளிகள் குறித்த அப்டேட் இன்னும் வரவில்லை. ஆனால் ராமர் கோமாளியாக களம் இறங்கியிருப்பது பலருக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.