என் படம் 450 நாள் ஓடுனப்ப இடையில் பத்து படம் சம்பவம் பண்ணுனுச்சு!.. இதெல்லாம் ராமராஜனுக்கு மட்டும்தான் நடந்துருக்கு!.
தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு நடிகராலும் செய்ய முடியாத சாதனைகளை எல்லாம் செய்தவர்தான் நடிகர் ராமராஜன். பெரும்பாலும் ராமராஜன் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது கூட்டம் அலைமோதும் நிலைதான் இருந்தது. ராமராஜன் படங்களின் முதல் நாள் ஓப்பனிங் கலெக்ஷனை பார்த்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களே ஆடிப்போன சம்பவங்கள் அப்போது நடந்தது.
ராமராஜன் முதலில் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராகதான் பணிப்புரிந்து வந்தார். அப்போது இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ராமராஜன்.

பார்ப்பதற்கு கிராமத்து ஆள் போல இருப்பதாலும், சூது வாது தெரியாத கதாபாத்திரமாக படங்களில் நடித்ததாலும் குறுகிய காலங்களிலேயே அவருக்கான ரசிக பட்டாளங்கள் அதிகரித்தது. இந்த நிலையில்தான் மொத்த தமிழ் சினிமாவையும் திருப்பி போடும் படமாக கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியானது.
400 நாட்களை தாண்டி ஓடிய கரகாட்டக்காரன் ஒரு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் அப்போது நடந்த இன்னொரு அதிசயத்தையும் ராமராஜன் கூறுகிறார். கரக்காட்டக்காரன் திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய நடிப்பிலேயே 10 திரைப்படங்கள் அந்த 400 நாட்களில் வெளியாகின.
கரகாட்டக்காரனோடு சேர்ந்து அவையும் கூட 100 நாட்கள் எல்லாம் ஓடி வெற்றி கொடுத்தன என்றால் மக்களின் ஆதரவுதான் அதற்கு காரணம் என்கிறார் ராமராஜன்