கவர்ச்சியிலேயே ரெண்டு வகை இருக்கு!.. குடும்பமா அதை பாக்கணும்னுதான் நான் நினைச்சேன்!.. சிம்ரனின் வைரல் டாக்!.
2000 களில் இளைஞர்களின் கனவு நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். வட இந்தியாவில் இருந்து தமிழில் வாய்ப்பு தேடி வந்த சிம்ரனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம்.
ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சிம்ரன். அதன் பிறகு அவருக்கு எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து அப்போது பிரபலமாக விஜய், அஜித், சூர்யா, சரத்குமார், பிரசாந்த், விஜயகாந்த் போன்ற பெரும் நடிகர்களுடன் நடித்து வந்தார்.

கவர்ச்சி நடிகையாக பலருக்கும் சிம்ரனை பிடிக்கும். அதே போல கவர்ச்சி இல்லாமல் பல படங்களில் நடித்திருக்கிறார் கண்ணதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களில் கவர்ச்சியே இல்லாமலும் நடித்திருப்பார்.
கவர்ச்சி குறித்து சிம்ரனின் விளக்கம்:
இந்த நிலையில் முன்பு ஒருமுறை கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் கவர்ச்சி குறித்து புது விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார் சிம்ரன். கவர்ச்சியை பொறுத்தவரை இரண்டு வகையான கவர்ச்சிகள் சினிமாவில் உண்டு. ஒன்று அழகான கவர்ச்சி அது மிக அழகாகவும் பார்ப்பவர்களுக்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

இரண்டாவது விதம் கொஞ்சம் வன்முறையாக இருக்கும். அது பார்ப்பவரை முகம் சுளிக்க வைப்பதாய் இருக்கும். என்னை பொறுத்தவரை நான் கவர்ச்சியாக நடித்தாலும் கூட பார்ப்பவர்கள் அதை குடும்பமாக பார்க்க வேண்டும். அந்த வகையில் இருக்க வேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறேன். அதிகப்பட்சம் அப்படிதான் நடித்திருக்கிறேன் என கூறியுள்ளார்.