முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான காமெடி நடிகர்கள் இருந்தார்கள். தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, நாகேஷ், சந்திரபாபு இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் குறைய துவங்கினர்.
அப்படியும் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் காமெடி நடிகராக தனி இடத்தை பிடித்தவர் நடிகர் முனிஸ்காந்த். அவரது முதல் படமான முண்டாசுபட்டி திரைப்படத்தில் அவருக்கு இருந்த கதாபாத்திரத்தின் பெயரே அவரது பெயராக மாறியது எனலாம்.

அதற்கு பிறகு ராட்சசன் மாதிரியான திரைப்படங்களில் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் சிறப்பாக நடித்திருந்தார் முனிஸ்காந்த். அவர் அறிமுகம் ஆன அனுபவம் குறித்து நடிகர் காளி வெங்கட் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
காளி வெங்கட்டும் முண்டாசுப்பட்டி திரைப்படம் மூலமாகதான் அறிமுகமானார். முதலில் இந்த படம் குறும்படமாகதான் எடுக்கப்பட்டது. அப்போது படத்தில் முனிஸ்காந்த் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நபர் நடித்திருந்தார்.
படத்திற்கான டப்பிங் நடக்கும்போது அந்த நபர் வராத காரணத்தால் முனிஸ்காந்த் அந்த படத்திற்கு டப்பிங் செய்தார். அதில் அவரது டப்பிங்காலேயே அந்த கதாபாத்திரம் சிறப்பாக மாறியது. பிறகுதான் சினிமாவில் படமாக்கும்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்கிறார் காளி வெங்கட்






