இந்த வேலையை பாக்குறதுக்கு கோவில்ல போய் பிச்சை எடுக்கலாம்!.. பயில்வான் ரங்கநாதனை நேரடியாக கேட்ட விஷால்!..

நடிகர் விஷால் ரத்னம் படத்தின் ப்ரொமோஷனுக்காக நிறைய யூ ட்யூப் சேனல்களுக்கும் பத்திரிக்கைகளுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்த படத்தின் லாபத்தில் விஷாலுக்கும் பங்கு கொடுக்கப்பட இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.

அதனால்தான் விஷால் இவ்வளவு ஆர்வமாக படத்தின் ப்ரோமோஷனில் இறங்கியிருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தப்போது அதில் பயில்வான் ரங்கநாதனும் கலந்துக்கொண்டார்.

அவரை பார்த்த விஷால் மிகுந்த கோபமாகி அவரிடம் பேச முடியாது என கூறிவிட்டார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் பேசி கொண்டிருக்கும்போது ஏன் பயில்வான் ரங்கநாதனை பார்த்து இவ்வளவு கோபப்படுகிறீர்கள் என கேட்டனர்.

vishal1
vishal1
Social Media Bar

அதற்கு பதிலளித்த விஷால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அந்தரங்கமான வாழ்க்கை ஒன்று உண்டு. அனைவருக்குமே அப்படியான ஒரு வாழ்க்கை இருக்கும். அதை வெளியில் கூறி அதை வைத்து பிரபலமாவது என்பது மிகவும் இழிவான ஒரு செயலாகும்.

இப்படி பணம் சம்பாதிப்பதற்கு வெளியில் பிச்சை எடுத்து அவர் சம்பாதிக்கலாம். இப்போது அவர் செய்வதோடு ஒப்பிட்டால் அது கொஞ்சம் கௌரவமான வேலைதான் என நேரடியாகவே பதிலளித்துள்ளார் விஷால்.