விஜய் நடிப்பில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் கோட் திரைப்படம். அதிக அளவிலான மக்கள் மத்தியில் ஏற்கனவே இந்த படம் ஆவலை ஏற்படுத்தி வருகிறது.
விஜய்யுடன் நடிகர் பிரசாந்த்,பிரபுதேவா போன்ற முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். இளைஞராக வரும் விஜய் முதிய விஜய்க்கு வில்லனாக இருப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை நடிக்க வைப்பது குறித்தும் பேச்சுக்கள் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் விஜயகாந்த் குடும்பத்திடம் இதற்காக அனுமதி கேட்டிருந்தார் வெங்கட் பிரபு. ஒருவழியாக அவர் அனுமதி கொடுக்கவே விஜய்யும் விஜயகாந்தும் சேர்ந்து சண்டை போடுவது போல காட்சி ஒன்றை அமைந்துள்ளனராம்.
இந்த காட்சி மிக பிரமாதமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் பிரபாகரன் காலத்தில் விஜயகாந்த் எப்படி இருந்தாரோ அப்படியே இந்த படத்திலும் வருகிறாராம். இதனை பார்த்த விஜயகாந்தின் குடும்பத்துக்கே மிகவும் ஆனந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளதாம்.






