என் கர்ப்பத்தையே அவர் நம்பலை!.. ஜிவி பிரகாஷ் குறித்து ரகசியம் உடைத்த சைந்தவி!.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து விஷயம்தான் தற்சமயம் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ்.

இவர் சிறுவயது முதலே சைந்தவி என்னும் பெண்ணுடன் நட்புடன் பழகி வந்தார். வளர்ந்த பிறகு அந்த நட்பே காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்சமயம் இவர்கள் இருவரும் பிரிவது என முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு வகையான சர்ச்சைகள் இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன.

gv prakash saindavi
gv prakash saindavi
Social Media Bar

ஆனால் இதற்கு முன்பு ஒரு பேட்டியில் கற்பமான போதே அதுக்குறித்து ஜிவி பிரகாஷ் சந்தோஷம் அடையவில்லை என சைந்தவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறும்போது இரவு ஜிவி உறங்கி கொண்டிருந்தப்போது அவரிடம் சென்று நான் கர்ப்பமாக இருப்பதாக கூறினேன்.

ஆனால் அதை சுத்தமாக காதில் கேட்காமல் அவர் உறங்க சென்றுவிட்டார். பிறகு மறுநாள் காலையில் எழுந்தப்போதும் கூட இரவு ஏதோ சொன்னாயே என்ன என கேட்டுள்ளார். அப்போதும் நான் கர்ப்பமாக இருப்பதை கூறினேன். ஆனால் அவர் நம்பவில்லை.

அதன் பிறகு மருத்துவமனை சென்றப்பிறகு அங்கு மருத்துவர் சொன்னப்பிறகுதான் அவர் நம்பினார் என்கிறார் சைந்தவி. தற்சமயம் இவர்கள் இருவரும் பிரிகிறார்கள் என்றால் அந்த குழந்தை தாய் வசம் இருப்பதுதான் நல்லது என நெட்டிசன்கள் ஒருப்பக்கம் பேசி வருகின்றனர்.