ஜிவி பிரகாஷ் விவாகரத்தில் ரஹ்மான், விஜய்க்கு தொடர்பிருக்கா!.. பிரபலம் கூறிய தகவல்!..

தன்னுடைய 17 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். வெயில் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக இவர் அறிமுகமானார். வெயில் திரைப்படத்திலேயே வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே என்கிற இரண்டு ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார் ஜிவி பிரகாஷ்.

பல ஆண்டுகளாக காதலித்த காதலியை 2013 ஆம் ஆண்டு கரம் பிடித்தார் ஜிவி பிரகாஷ். 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்சமயம் இவர்கள் இருவரும் பிரியலாம் என முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் இதுக்குறித்து நிறைய சர்ச்சைகள் போய் கொண்டுள்ளன.

வெகு நாள் காதலர்களாக இருந்து திருமணம் செய்துகொண்டவர்கள் எதற்காக இப்போது விவாகரத்து செய்கின்றனர் என்பதே பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

gv prakash saindavi
gv prakash saindavi
Social Media Bar

இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானின் அக்கா மகன் தான் ஜிவி பிரகாஷ். எனவே இந்த பிரச்சனையில் ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பரான தளபதி விஜய் ஆகியோர் தலையிட்டிருப்பதாக பேச்சுக்கள் இருந்தன.

இதுக்குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் பேசும்போது ஏ.ஆர் ரகுமானுக்கும் ஜிவி பிரகாஷிற்கும் அவ்வளவு நெருங்கிய உறவு எல்லாம் இருக்கவில்லை. திரைத்துறைக்கு கூட ஏ.ஆர் ரகுமானின் உதவி இல்லாமல்தான் வந்தார் ஜிவி பிரகாஷ்.

விஜய்யை பொறுத்தவரை அவர் என்னதான் ஜிவியின் நண்பராக இருந்தாலும் அவர்களது குடும்ப விவகாரத்தில் அவர் நுழைய வாய்ப்பில்லை. எனவே இவர்கள் இருவருமே இந்த பிரச்சனையில் தலையிட்டிருக்க வாய்ப்பில்லை என்கிறார்.