லோகேஷை விட வெங்கட் பிரபு வேகமா இருக்காரே!.. ரஜினி பட இயக்குனர்கள் கத்துக்கணும்!.

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் முதல் படமாக கோட் திரைப்படம் இருப்பதால் இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் துவங்கியது. ஆனால் மிக வேகமாக படத்தின் படப்பிடிப்பை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஸன் படம் என பரவலாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த படத்தில் பிரபு தேவா நடிகர் பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய்யும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று படப்பிடிப்பை எடுத்து வந்த வெங்கட் பிரபு படக்குழு ஏற்கனவே முக்கால்வாசி காட்சிகளை படமாக்கிவிட்டனராம்.

GOAT
GOAT
Social Media Bar

மேலும் பாதி படத்தை முடித்துவிட்டு அதன் எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளையும் இப்போதே முடித்து வைத்துவிட்டனராம். இதற்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இதே போல வேகமாக படப்பிடிப்பை நடத்தினார்.

தற்சமயம் அதை விட வேகமாக வெங்கட் பிரபு படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஆனால் ரஜினிகாந்திற்கு அமையும் இயக்குனர்கள் மட்டும் வெகு காலங்களாக ஒரே படத்தை இயக்கி வருகின்றனர். அவர்கள் இந்த இயக்குனர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நெட்டிசன்கள்.