அந்த நல்ல காரியத்தை பண்ணுனது நீங்கதானா..! ப்ரேம்ஜிக்கு சிம்பு செய்த சம்பவம்…
வல்லவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் ப்ரேம்ஜி. இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியாவார்.
இயக்குனர் வெங்கட்பிரபு, சிம்பு, வைபவ், யுவன் சங்கர் ராஜா, ப்ரேம்ஜி இவர்கள் எல்லாம் சினிமாவில் குழுவாக சுற்றும் நண்பர் கூட்டம் என கூறலாம். இந்த நிலையில் ப்ரேம்ஜியை தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அறிமுகம் செய்தவரே சிம்புதான் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ப்ரேம்ஜி.
ப்ரேம்ஜிக்கு ஆரம்பத்தில் இருந்தே திரைப்படங்களில் இசையமைப்பதில்தான் ஆர்வம் இருந்து வந்துள்ளது. அப்போதுதான் சிம்பு அவரே இயக்கி நடித்து வல்லவன் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

ப்ரேம்ஜியிடம் பேசிய சிம்பு ”உன்னை பார்த்தாலே சிரிப்பு வருகிறது. நீ திரையில் காமெடி செய்தால் நன்றாக இருக்கும். நான் வல்லவன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறேன். அதில் நயன்தாராவின் தோழனாக நீ நடித்தால் நன்றாக இருக்கும்” என பேசியுள்ளார்.
ஆனால் ப்ரேம்ஜி ஆரம்பத்தில் அதற்கு மறுத்துள்ளார். அதன் பிறகு படப்பிடிப்பு அன்று சிம்புவே நேரில் வந்து ப்ரேம்ஜியை படப்பிடிப்பு அழைத்து சென்று நடிக்க வைத்துள்ளார். அப்படிதான் ப்ரேம்ஜி நடிகராகி உள்ளார். அதன் பிறகு சென்னை 28 திரைப்படம் மூலம் ஓரளவு சினிமாவில் தெரிய துவங்கினார்.
ஆனால் மங்காத்தா திரைப்படம்தான் ப்ரேம்ஜியை இன்னும் பிரபலமாக்கியது.