அட்லியின் படுக்கையறை போட்டோவை பார்த்து கமெண்ட் செய்த சமந்தா!..

தமிழில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ.

அட்லீ பெரும்பாலும் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் ஹிட்டு கொடுக்கும் திரைப்படங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆனால் பிகில் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக திரைப்படங்களே அட்லீ இயக்கவில்லை.

atlee
atlee
Social Media Bar

பாலிவுட்டில் வளர்ச்சி:

அதற்கு பிறகு அவர் ஹிந்தியில் ஜவான் என்கிற திரைப்படத்தை வெகு நாட்களாக இயக்கி வந்தார். அதற்கு பலனளிக்கும் வகையில் ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி தாண்டி வசூல் கொடுத்தது. இயக்குனர் அட்லீ மற்றும் அவருடைய மனைவி இருவருமே சமூக வலைதளங்களில் கொஞ்சம் பிரபலமான புள்ளிகள் என்று கூறலாம்.

அடிக்கடி இவர்கள் இருவரும் இணைந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது உண்டு அந்த வகையில் தற்சமயம் இருவரும் படுக்கையறையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். அதற்கு கமெண்ட் செய்த நடிகை சமந்தா வாவ் என கூறி லைக் செய்துள்ளார்.

அட்லீ இயக்கிய மெர்சல், தெறி ஆகிய இரு திரைப்படங்களில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.