Raayan: தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சில படங்களை தானே தயாரித்தும் ,பாடல் எழுதியும், பாடகராகவும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இந்நிலையில் தனுஷின் 50-வது படத்தை பற்றிய அப்டேட் வெளியான போது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். ஏனென்றால் தனுஷின் 50-வது படத்தை தானே இயக்கி அதில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நேற்று தனுஷ் இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ராயன் படத்தில் ரசிகர்களை ரசிக்க வைத்த சில சிறப்பான விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.
ராயன் திரைப்படம்
தனுஷ் நடிப்பில் முக்கியமாக அவரின் இயக்கத்தில் நேற்று ஜூலை 26 ஆம் தேதி வெளிவந்த படம் தான் ராயன் திரைப்படம். தனுஷ் நடித்துள்ள 50-வது திரைப்படமாகும். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே பல நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தனுஷ் முன்னதாக இயக்கிய பா.பாண்டி படத்தை காட்டிலும் இத்திரைப்படம் கூடுதல் கவனத்தை பெற்றிருக்கிறது. ஆக்ஷன் படமாக வெளிவந்துள்ள ராயன் திரைப்படம் தற்பொழுது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. ராயன் திரைப்படத்தில் உள்ள பாசிட்டிவ் அம்சங்களை பார்க்கலாம்.
ராயன் படத்தில் உள்ள சூப்பர் சம்பவங்கள்
பா. பாண்டி படத்தை இயக்கிய பிறகு, பல விஷயங்களை கற்றுக்கொண்டு தற்பொழுது ராயன் படத்தில் முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார் தனுஷ். அந்த வகையில் படத்திற்கு ரசிகர்களை வரவழைப்பது ஆக்ஷன் காட்சிகள் தான் என்பதை நன்கு புரிந்து கொண்ட தனுஷ், ராயன் படத்தில் முதல் பாதியில் அவ்வளவாக ஆக்ஷன் காட்சிகளை வைக்காமல், இரண்டாம் பாதியில் ஆக்சன் பிளாக்குகளை வைத்து தெறிக்க விட்டிருக்கிறார்.
படத்தில் இசையை பற்றி கூற வேண்டாம். ஏனென்றால் ஒட்டுமொத்தமாக படத்திற்கும் ஏ. ஆர். ரகுமானின் இசை சம்பவம் செய்திருக்கிறது. அதிலும் கடைசியில் கிளைமாக்ஸில் வரும் “அடங்காத அசுரன் நான்” என்ற பாடலுக்கு இடையே, “உசுரே நீதானே” என்ற வரிகள் ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் புல்லரிப்பு ஏற்படுத்தியிருக்கும்.
மேலும் இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களின் பங்கும் பெரிய அளவில் இடம்பெற்று இருப்பதால் படத்தில் எங்கேயும் அவர்களின் பர்ஃபாமென்ஸில் குறை தெரியவில்லை.
மேலும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி மற்றும் சந்தீப் கிசன் கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்துள்ளது. அந்தப் படத்தில் வரும் “வாட்டர் பாக்கெட் மூஞ்சி ” என்ற பாடல் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது.
மேலும் தனுஷ் இந்த படத்தை இயக்கி இருந்தாலும், அவர் மட்டுமே முன்னிறுத்தி எந்த ஒரு காட்சியையும் அதிகப்படியாக வைக்காமல், தன்னை சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருப்பது அனைவரின் மத்தியிலும் வரவேற்கும்படியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் தனுஷ் மட்டும் பர்பாமென்ஸ் செய்யாமல் சந்தீப் கிசன் ,காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், செல்வராகவன் என அனைவரும் படத்தில் சண்டையில் ஈடுப்பட்டிருப்பது நன்றாக உள்ளது.






