இடுப்பு விஷயத்தில் தவறாக நடந்துக்கொண்ட இயக்குனர்.. தமிழ் சினிமாவில் இயக்குனரால் ஏமாந்த பிரபலங்கள்!..

தற்பொழுது சினிமா வாய்ப்புக்காக பல நடிகைகள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கலாம் என்று தயாராக இருக்கும்பொழுது, ஒரு சில நடிகைகள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சில காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருப்பார்கள். ஒரு சில நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். ஆனால் இதில் ஒரு சில நடிகைகள் விதிவிலக்கு.

என்னுடைய நடிப்பிற்கு மட்டும் அங்கீகாரம் கிடைத்தால் போதும். நான் எந்த ஒரு கவர்ச்சியான காட்சிகளிலும் நடிக்க மாட்டேன். அவ்வாறு நடித்தால் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்றால் நான் சினிமா-வை விட்டு செல்வதற்கும் தயாராக இருப்பதாக சில நடிகைகள் சில பேட்டிகளில் கூறி வருவதையும் நாம் அவ்வப்போது கவனித்து வருகிறோம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் விருப்பத்திற்கு மாறாக நடந்த ஒரு விஷயம் அப்பொழுது பெரும் பேசுபொருளாக மாறியது அதனைப் பற்றியும், இயக்குனர்களால் ஏமாற்றப்பட்ட பிரபலங்கள் பற்றியும் கோ காண்போம்.

நஸ்ரியாவிற்கு தெரியாமல் செய்த செயல்

கடந்த 2013இல் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான நய்யாண்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். வன ரோஜா என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த படத்தில் இடுப்பை தொடுவது போன்ற நெருக்கமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. ஆனால் அவ்வாறான காட்சிகளில் தான் நடிக்க மாட்டேன் எனவும், நஸ்ரியா மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு பதிலாக டூப் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Nasriya
Social Media Bar

ஆனால் இவ்வாறு டூப் வைத்து எடுக்கப்பட்டது நஸ்ரியாவிற்கு தெரியவில்லை என்றும், படம் வெளியாகி ஓடும் பொழுது தான் அந்த காட்சியில் டூப் வைத்து எடுத்திருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. மேலும், அவ்வாறு டூப் வைத்து எடுத்தாலும் பார்ப்பவர்களுக்கு அதில் நான் தான் நடித்திருக்கிறேன் என்பது போல் காட்சிப்படுத்தி விடாதா என்று காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார் நஸ்ரியா. இந்த சம்பவம் அப்பொழுது பெரும் பேசி பொருளாக இருந்தது.

இந்தியன் படம்

covai babu

தற்பொழுது இந்தியன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றுவந்த நிலையில், இந்த படத்தில் நடித்த விவேக் காலமானார். அதனால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் டூப் ஆக நடித்தவர் தான் நடிகர் கோவை பாபு. ஆனால் இவருக்கு இந்தியன் படத்தில் டூப் ஆக தான் நடிக்க போகிறோம் என தெரியாதாம். படம் வெளிவந்த பிறகு தான் என்கு தெரிந்தது என கூறியிருக்கிறார்.

இயக்குநர் பாலா

Mamitha Baiju

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பார்த்து பயப்படும் ஒரு இயக்குநர் என்றால் அது பாலா தான். இவர் நடிகர்கள் நடிக்கவில்லை என்றால், திட்டுவது மட்டுமல்லாமல் கோபத்தில் அடித்துவிடுவாராம். இந்நிலையில் வணங்கான் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் தான் மமிதா பைஜு. ஆனால் மமிதா பைஜு சரியாக நடிக்கவில்லை என்பதால் பாலா இவரை அடித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் இவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரியவந்துள்ளது.