Vedika: தமிழ் சினிமாவில் குறைந்த அளவு படங்கள் நடித்திருந்தாலும் சில நடிகைகள் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். அவர்களுக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் விளம்பரங்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் எப்பொழுதும் நிலைத்திருப்பார்கள்.
அந்த வகையில் தமிழில் இரண்டு, மூன்று படங்கள் மட்டும் நடித்து தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் நடிகை வேதிகா.
இவரின் தற்போதைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி அது ரசிகர்களின் மத்தியில் பேசுபொருளாக மாறி வருகிறது.
நடிகை வேதிகா
நடிகை வேதிகா மதராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்குப் பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்தார்.
அதன் பிறகு வேதிகா சக்கரகட்டி, காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அற்புதமாக நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டது.
மேலும் அதேபோல இவர் காவியத்தலைவன் படத்திலும் சிறப்பாக நடித்திருப்பார். இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டு பெற்றது.
இவ்வாறு தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்த வேதிகா, பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை.
சமூக வலைத்தளங்களில் நடிகை வேதிகா
தற்பொழுது பிற மொழிகளில் பிஸியாக வேதிகா நடித்து வருகிறார். அதிலும் அவர் சமீபத்தில் ஓடிடி தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மாடனாகவும், கவர்ச்சியாகவும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் வேதிகா. மேலும் அழகான போட்டோஷூட் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
இவர் தற்பொழுது வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவானது அவரின் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் நடிகை வேதிகாவை பார்ப்பதற்கு தேவதை போல் உள்ளதாக அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வைரலாகி வருகிறார்கள்.






