சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு உள்ளான ஜோடி என்றால் அது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா. யாரும் எதிர்பாராத விதத்தில் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படம் வெளிவர அது ரசிகர்களுக்கும், சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து பெற்ற பிறகு, சோபிதா துலிபாலா உடன் நாக சைதன்யா இருவரை பற்றியும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் அது குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படத்தை நாகார்ஜுனா வெளியிட்டிருந்தா். எனவே அவர்களின் காதல் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரின் பிரிவிற்கு சோபிதா துலிபாலா தான் காரணம் என சமூக வலைத்தளத்தில் தற்பொழுது கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
நட்சத்திர ஜோடிகளான நாக சைதன்யா சமந்தா
சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா. இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து பின் இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டார்கள்.

அனைவரும் ரசித்த இந்த ஜோடி சிறிது காலங்களிலேயே பிரிந்து விட்டார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு தாங்கள் விவாகரத்து பெறப்போவதாக இருவரும் அறிவித்த நிலையில், சமந்தா நாங்கள் இருவரும் மனம் ஒத்து தான் பிரிகிறோம். எங்களை யாரும் விமர்சிக்க வேண்டாம் என இணையதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து நாக சைதன்யா தற்போது சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்.
நாக சைதன்யாவின் விவாகரத்திற்கு காரணமே சோபிதா தான்
இந்நிலையில் இருவரின் விவாகரத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. சமந்தா கவர்ச்சியாக நடனமாடுவது, மேலும் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார் மற்றும் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. போன்ற பல காரணங்களினால் தான் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்தார் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் விவாகரத்து குறித்த அறிவிப்பு வெளிவந்த நிலையில் சமந்தாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவர் “இனிமேல் மோசமான பெண் உனக்குத்தான்” என பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது. ஏனென்றால் நாக சைதன்யா அப்பொழுது சோபிதாவுடன் தகாத உறவில் இருந்திருக்கிறார். அதனால் தான் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்திருப்பார் என பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






