தமிழ் சினிமாவில் பல நடிகைகள் கவர்ச்சியாக தங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு சில நடிகைகள் தங்களுக்கு கவர்ச்சி காட்ட விருப்பமில்லாமல் தங்களுக்கு என ஒரு வரைமுறை வைத்து சினிமாவில் நடித்து வருவதும் வழக்கம். அந்த வகையில் பல நடிகைகள் கவர்ச்சி காட்டாமல் பல படங்களில் நடித்து தற்பொழுதும் சினிமாவில் தங்களுக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார்கள்.
மேலும் ஒரு சில நடிகைகள் கவர்ச்சி காட்டுவதற்கோ அல்லது ஆபாசமான காட்சிகளில் நடிப்பதற்கோ என்றும் தயங்கியதில்லை. அந்த வகையில் ஒரு காலத்தில் கனவு கன்னியாக இருந்து வந்தவர்கள் சில்க் ஸ்மிதா மற்றும் அனுராதா. இவர்களுக்கு அப்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள்.
இந்நிலையில் படத்தில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கும் பொழுது தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வோம் என அனுராதா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை அனுராதா
80-களில் அதிகம் அறியப்பட்ட முக்கிய நடிகையாக அனுராதா இருந்து வந்தார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தன்னுடைய 13 வது வயதில் இயக்குனர் கே ஜி ஜார்ஜ் மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் உண்மையான பெயர் சுலோச்சனா. ஆனால் சினிமாவிற்காக அனுராதா என மாற்றி அமைக்கப்பட்டது.

மேலும் பல படங்களில் கவர்ச்சியான நடனங்கள் ஆடியுள்ளார். வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வந்த அனுராதா தங்கம், கண்ணான கண்ணே, முத்தாரம் மற்றும் தெய்வமகள் உள்ளிட்ட சன் டிவியில் பல தொடர்களில் நடித்து வந்து மக்களிடையே பிரபலம் அடைந்தார்.
நடன இயக்குனரான சதீஷ்குமாரை 1987ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா ஸ்ரீ மற்றும் காளி சரண் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
ஓபனாக பேசிய அனுராதா
இந்நிலையில் படங்களில் கவர்ச்சியான நடனங்களில் ஆடும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பேட்டி ஒன்றில் அனுராதா கூறி இருக்கிறார்.
அப்போது நாங்கள் அழகாக தெரிவதற்கு எங்களின் உடைக்கு ஏற்றவாறு செருப்பு முதல் அனைத்தையும் எங்களுடைய காஸ்டியூம் டிசைனர் தாயர் செய்து கொடுப்பார்.
நாங்கள் அணிந்து கொள்ளும் ஒவ்வொரு அணிகலனும் பார்த்து, பார்த்து நாங்கள் தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்வோம் எனக் கூறினார்.
மேலும் படங்களில் நடிக்கும் போது அதிக கிளாமர் காட்சிகளுக்காக சில சமயங்களில் லோ ஆங்கிள் ஷாட் எடுக்கும் போது கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் பலரும், நானும் படத்திற்கு என்ன காஷ்டியூம் உள்ளாடை அணிந்து கொள்கிறேனோ, அதேபோன்று ஒரு எலாஸ்டிக்கில் மற்றொரு உடையை என்னுடைய காஸ்டியூம் டிசைனர் தயார் செய்து கொடுப்பார்.
அதனை முதலில் போட்டுக் கொள்வேன். அவ்வாறு போட்டுக்கொள்ளும் போது அது என்னுடைய தொடையை விட்டு நகராது. அதன் மேல் என்னுடைய காஸ்ட்யூம் அணிந்துக் கொள்வேன். அப்போது கேமரா எந்த ஆங்கில் படம் பிடித்தாலும் அது கவர்ச்சியாக காட்டும். ஆனால் பாதுகாப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.






