ஜிபி முத்துவிற்கு குவியும் சப்போர்ட் –  தனத்தோட கதி என்ன?

தமிழில் பிக் பாஸ் துவங்கியது முதலே ஒரே சண்டையாகதான் சென்று கொண்டுள்ளது. ஆரம்பித்த நாள் முதலே ஜிபி முத்துவிற்கும் தனலெட்சுமிக்கும் பிரச்சனையாகவே இருந்தது.

கிராமத்து ஆள் என்பதால் ஜிபி முத்துவின் பேச்சு வழக்குகள் சற்று மாறுப்பட்டிருக்கும். ஆனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள பலரும் நகர வாழ்க்கையை சேர்ந்தவர்கள் என்பதால் ஜிபி முத்து பேசும்போது பல விஷயங்கள் அவர்களுக்கு புரியாமல் போகிறது.

Social Media Bar

தனலெட்சுமிக்கும், ஜிபி முத்துவிற்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் தவறு தனலெட்சுமி மேல்தான் என முடிவு செய்த ஜனனி அவரை ஸ்வாப் செய்தார். ஆனால் தனலெட்சுமி இதனால் அழ துவங்கினார். மேலும் அவர் ஜிபி முத்து மற்றும் ஜனனி மீது கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் இரண்டு உங்களுக்கு தெரிந்து நன்றாக ப்ராபாமன்ஸ் செய்த இருவரை கூறுங்கள் என பிக் பாஸ் கூறினார். அப்போது அங்கு உள்ள பலரும் ஜிபி முத்துவை கூறினர். ஜிபி முத்து இந்த பிக் பாஸை ஒரு போட்டியாக பார்க்காமல் அனைவரையும் சகோதரத்துவத்துடன் பார்க்கிறார் என ஏ.டி.கே கூறியுள்ளார்.

இதனால் பலரும் ஜி.பி முத்துவுற்கே ஆதரவாக இருக்கிறார்கள் என தெரிகிறது. அதே சமயம் தனலெட்சுமிக்கு ஆதரவாக குறைவான நபர்களே இருப்பது தெரிகிறது.