விஜய் சேதுபதியாவே இருந்தாலும் இதான் நிலைமை… தூக்கி அடித்த பிக்பாஸ்.. இப்படி ஒன்னு நடந்துச்சா?

தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவியில் துவங்கி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காகவே அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கின்றனர் பிக் பாஸ் குழுமத்தினர்.

இந்த நிலையில் அளவுக்கதிகமாக இந்த முறை 18 போட்டியாளர்கள் முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதை பார்க்க முடிந்தது. ஏனெனில் இதற்கு பிறகு வைல்ட் கார்ட் என்கிற ஒரு ரவுண்டு வரும். அதிலும் சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

vijay sethupathi bigboss
vijay sethupathi bigboss
Social Media Bar

போன முறை வி.ஜே அர்ச்சனா மாதிரியான சிலர் அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள். அப்படி இருக்கும் பொழுது முதல் நாளே 18 பேர் செல்ல காரணம் என்ன என்று ஒரு கேள்வி இருந்து வந்தது.

விஜய் சேதுபதி சப்போர்ட்:

இது குறித்து தற்சமயம் மக்கள் மத்தியில் ஒரு பேச்சுக்கள் இருந்து வந்தன. அதாவது மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனாவும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

உண்மையிலேயே சாச்சனா கலந்து கொண்டதற்கு காரணம் விஜய் சேதுபதி தான் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதிதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரிந்துரை செய்து இவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவரை நிகழ்ச்சியிலிருந்து தூக்க வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளே எவிக்‌ஷன் என்கிற விஷயத்தை வைத்து அவரை தூக்கி இருக்கின்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். எனவே விஜய் சேதுபதியாகவே இருந்தாலும் பரிந்துரை செய்தெல்லாம் பிக் பாஸிற்கும் கொண்டு வந்து விட முடியாது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.