அந்த படத்தோட காப்பின்னு படம் வந்த பிறகுதான் தெரிஞ்சது.. வெரி சாரி… கோட் குறித்து கூறிய வெங்கட் பிரபு.!

கோட் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியாகி எதிர்பார்த்ததை விட அதிக வசூலை பெற்று கொடுத்திருக்கிறது. லியோ படம் அளவிற்கு இல்லை என்றாலும் கூட அதைவிட கொஞ்சம் குறைவான அளவில் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது கோட் திரைப்படம்.

இந்த வசூலே இவர்களுக்கு நல்ல வெற்றிதான். ஏனெனில் இந்த திரைப்படத்தை தயாரித்தது ஏ.ஜி.எஸ் நிறுவனம். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெரும்பாலும் பெரிய திரைப்படங்களை தயாரிப்பது கிடையாது.

இப்பொழுது எல்லாம் தொடர்ந்து அவர்கள் சின்ன திரைப்படங்களைதான் தயாரித்து வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு கோட் திரைப்படம் மிகப்பெரிய முதலீடு ஆகும். அதனால் அதிலிருந்து கிடைத்த லாபமும் பெரிய லாபமாக உள்ளது.

GOAT

Social Media Bar

கோட் படம் காபி:

இனி தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களை இவர்கள் தயாரிப்பதற்கு இது உதவியாக இருக்கும். இந்த நிலையில் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும் பொழுது கோட் திரைப்படம் ஒரு திரைப்படத்தின் காப்பிதான் என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.

அவர் அந்த பேட்டியில் கூறும் பொழுது படம் வெளியான பிறகு தான் எனக்கே இந்த விஷயம் தெரிந்தது படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் விஜயகாந்த் நடித்த ராஜதுரை திரைப்படத்தின் காபிதான் கோட் என்று கூறினார்கள். அதற்கு பிறகு தான் நான் ராஜதுரை திரைப்படத்தை பார்த்தேன், முன்பே இந்த திரைப்படத்தை பார்த்திருந்தால் படத்தின் திரை கதையை மாற்றி அமைத்திருப்பேன் இன்னும் கொஞ்சம் நல்லாவே படத்தை பண்ணியிருப்பேன் என்று கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.