சமீபத்தில் விஜய் விக்கிரவாண்டியில் தன்னுடைய கட்சி மாநாட்டை நடத்தி இருந்தார். இந்த மாநாடு அதிக பிரபலம் அடைந்தது ஏனெனில் பொதுவாக விஜய் இசை வெளியீட்டு விழாக்களுக்கு வந்தால் கூட மிக பொறுமையாக பேசக்கூடிய நபர்.
அப்படி இருக்கும் விஜய் மாநாட்டில் பட்டாசு போல வெடித்து தள்ளி இருந்தார். மாநாடு என்றதும் அங்கும் வந்து விஜய் அமைதியாக பேசுவார் என்பது தான் பலரது எண்ணமாக இருந்தது. இந்த அளவிற்கு விஜய் பல விஷயங்களை அரசியல் ரீதியாக அணுகுவார் என்பது ஒரு பலரும் எதிர்பார்க்காத விஷயமாக இருந்தது.
இந்த நிலையில் இவரது பேச்சுக்கு ஒரு பக்கம் நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களும் வரத்துவங்கி இருக்கின்றன. இந்தியாவை பொருத்தவரை இந்தியா ஒரு ஜனநாயக நாடு இந்தியாவில் குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கி தேர்தலில் நிற்க முடியும்.

விஜய் குறித்து நமீதா:
எனவே விஜய் தேர்தலில் நிற்பது ஒரு தவறான விஷயமே கிடையாது என்றாலும் கூட தொடர்ந்து அது தவறான விஷயமாக சிலரால் பிம்பப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து நமீதா சமீபத்தில் விளக்கம் அளித்து இருந்தார்.
அவர் அதில் கூறும் பொழுது விஜய் தேவையற்ற விஷயங்களை மேடையில் பேசுகிறார் எடுத்த உடனேயே இப்படியெல்லாம் பேசுவது சரி கிடையாது பேச்சில் இருக்கும் வேகம் செயலிலும் இருக்க வேண்டும் சும்மா பேசி மட்டும் இருப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார் நமீதா., இவர்கள் இருவரும் இணைந்து அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






