அம்மன் கோவிலில் நடக்கும் மர்மங்கள்.! துப்பறியும் டிடெக்டிவ்.. எதிர்பார்ப்பை தூண்டும் விகடகவி.!

திரைப்படங்களுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் இப்பொழுது வெப் தொடர்களுக்கும் இருந்து வருகின்றன. இதனால் தொடர்ந்து வெப் சீரிஸ்கள் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.

முக்கியமாக ஓடிடி நிறுவனங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு இந்த தொடர்கள் மிக உதவியாக இருக்கின்றன. தற்சமயம் இந்த நிலையில் ஜி5 ஒ.டி.டியில் விகடகவி என்கிற வெப் தொடர் வெளியாக இருக்கிறது.

வருகிற நவம்பர் 28ஆம் தேதி ஜீ 5 வில் வெளியாக இருக்கிறது இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அதுவே அதிக எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. விகடகவி தொடரை பொறுத்தவரை ராமகிருஷ்ணா என்கிற டிடெக்டிவ் தான் இந்த தொடரின் கதாநாயகனாக இருக்கிறார்.

vikadakavi  web series
vikadakavi web series
Social Media Bar

டிடெக்டிவ் கதை:

மர்மம் நிறைந்த ஒரு கிராமத்தில் நடக்கும் மர்ம கலைகளை இவர் கண்டறிவதே கதையாக இருக்கிறது. இந்த கிராமத்தில் ஒரு அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனின் சாபத்தால்தான் இந்த விஷயங்கள் எல்லாம் நிகழ்வதாக ஒரு மூடநம்பிக்கை அங்கு இருந்து வருகிறது.

அது எப்படி ஒரு மூடநம்பிக்கையால் கொலைகள் வரிசையாக நிகழும் என்கிற பாணியில் இருந்து இந்த மர்மங்களை டிடெக்டிவ் கதாபாத்திரம் துப்பறிய துவங்குகிறது. கல்லூரி காலங்களில் இருந்து இவர் நன்றாக துப்பறியும் திறன் கொண்டவர் என்பதால் இந்த வேலைக்காக இவர் இந்த கிராமத்திற்கு வருகிறார்.

இவர் என்னவெல்லாம் கண்டறிய போகிறார் என்பதை கூறும் ஒரு மர்ம தொடராக விகடகவி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.