சம்பளம் வாங்குறீங்களே..! இதெல்லாம் பண்ண மாட்டீங்களா?. சரத்குமாரை வச்சி செய்த கே.எஸ் ரவிக்குமார்.!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் கே.எஸ் ரவிக்குமார் முக்கியமானவர். அப்போது தமிழ் சினிமாவில் இருந்த பெரிய நடிகர்கள் அனைவருக்கும் வெற்றி படங்களை கொடுத்தவர் கே எஸ் ரவிக்குமார்.
அதனாலேயே அவர் ஒரு தனித்துவமான இயக்குனராக பார்க்கப்படுகிறார் இப்பொழுது வரை கே.எஸ் ரவிக்குமாருக்கு எப்போதும் தமிழ் சினிமாவில் தனிப்பட்ட மரியாதை என்பது இருந்து வருகிறது. ஆனால் கே.எஸ் ரவிக்குமார் படபிடிப்பு தளங்களில் பெரிய பெரிய நடிகர்களை கூட மோசமாக திட்டிவிட கூடியவர் என்று ஒரு பேச்சு உண்டு.
கே.எஸ் ரவிக்குமார் சொன்ன விஷயம்:
இது குறித்து அவர் பேட்டிகளில் கூறும் பொழுது ஆமாம் அப்படித்தான் திட்டுவேன். நான் ஒருவேளை யாரையுமே திட்டவில்லை என்றால் சுற்றி வேலை பார்ப்பவர்களே என்னை அழைத்து எனக்கு உடம்பு சரியில்லையா என்று கேட்பார்கள்.

அந்த அளவிற்கு என்னோடு பணிபுரிபவர்களுக்கு பழகிப்போன விஷயம் தான் இது. உதாரணத்திற்கு சரத்குமார் மாதிரியான பெரிய நடிகர்கள் படப்பிடிப்புக்கு தாமதமாக வரும்பொழுது நான் அவர்களை நேரடியாக திட்டாமல் அங்கே நின்று கொண்டிருப்பவர்களை பார்த்து திட்டுவேன்.
தினமும் சம்பளம் வாங்குகிறீர்கள் பேட்டா எல்லாம் சரியாகத்தானே வருகிறது வந்து வேலையை சரியான நேரத்திற்கு பார்ப்பதற்கு என்ன என்று கேட்பேன். அப்பொழுது அதை புரிந்து கொண்டு அவர்கள் வந்து நடித்துக் கொடுப்பார்கள் என்று நேரடியாக கூறியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார் அதை பக்கத்தில் இருந்த சரத்குமாரும் ஒப்புக்கொண்டு பேசி இருந்தார். அந்த வீடியோ இப்பொழுது டிரெண்டாகி வருகிறது.