Latest News
சீனாவில் அடுத்த சம்பவத்தை செய்து வரும் மகாராஜா திரைப்படம்..!
சிம்பிளான கதை அம்சத்தில் உருவாகி மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்த திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதி நடிப்பில் மிக சாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய ஒரு திரைப்படமாக மகாராஜா இருந்தது.
நிதிலன் என்கிற இயக்குனர் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. தமிழில் வெளியான பொழுது இந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்திருந்தது. அப்பொழுதே மக்கள் இந்த திரைப்படத்தை பெரிதாக கொண்டாடி வந்தனர்.
மகாராஜா திரைப்படம்:
இந்த நிலையில் இந்த திரைப்படம் தமிழில் நல்ல வெற்றியை கொடுத்தது பிறகு இப்பொழுது சீனாவிலும் இந்த திரைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர். சீன சர்வதேச திரைப்பட விழாவில் மகாராஜா திரைப்படம் திரையிடப்பட்டது.
அப்போது மக்கள் மத்தியில் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது எனவே மகாராஜா திரைப்படத்தை சீனாவிலும் வெளியிடலாம் என்று திட்டமிட்டனர். அந்த வகையில் சீனாவில் குறைவான திரையரங்குகளில் மட்டுமே மகாராஜா திரைப்படத்தை வெளியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்படியும் கூட வெளியாகி சில நாட்களிலேயே 52 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது மகாராஜா திரைப்படம். எப்படியும் சீனாவிலும் 100 கோடி வரை இந்த படம் வசூல் செய்யும் என்று நம்பப்படுகிறது அதே சமயம் இந்த படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கும் பட்சத்தில் இதன் வசூல் அளவு இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.